மயிலாடுதுறையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன்.. தொலைந்த வாழ்க்கை.. அறிய வேண்டிய பாடம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவனுக்கும், அதே வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே வகுப்பறையில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மாணவனும், மாணவியும் கடந்த ஒரு ஆண்டாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனால் மாணவி கர்ப்பமாக உள்ளார். இப்போது சக மாணவன் காதல் காரணமாக வாழ்க்கையை தொலைத்து போக்சோவில் உள்ள போயிருக்கிறார்.
இன்றைக்கு பதின் பருவ காதலில் விழும் மாணவ மாணவிகள், அதனால் வாழ்க்கையையே தொலைத்து விடுகிறார்கள். அழகான பையன், ஸ்டைலான பைக் டிரைவிங், பின்னாலேயே சுற்றுவது போன்ற மூன்று தகுதி இருந்தாலே சில 2கே கிட்ஸ் மாணவிகள் காதலிக்க தொடங்குகிறார்கள். அந்த காதல் கடைசியில் இருவருக்கும் இடையே உறவில் முடிகிறது. இதனால் கர்ப்பமாகும் மாணவி, குழந்தை பெற்றுக் கொண்டு, அதனால் எதிர்காலத்தில் எப்படி எல்லாம் வாழவேண்டும் என்று பெற்றோர் ஆசைப்பட்டார்களோ, அத்தனையும் கிடைக்காமல் வாழ்க்கையை தொலைக்கிறார்.

அதேபோல் கர்ப்பமாக்கிய சக மாணவனும், எதிர்காலம் பற்றி எந்த புரிதலும் இல்லாமல் காதல் தான் உலகில் எல்லாம் என்று நினைத்து சுற்றி, கடைசியில் கம்பி எண்ணி வாழ்க்கையை தொலைக்கிறார். இதையறிந்து தான் பதின் பருவ காதல் விவகாரத்தில், சட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பதின் பருவ காதலால் வாழ்க்கையை தொலைத்த மாணவ மாணவிகளை பற்றி பார்ப்போம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவனுக்கும், அதே வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே வகுப்பறையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மாணவனும், மாணவியும் கடந்த ஒரு ஆண்டாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மாணவியின் பெற்றோர் அவளை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை அறிந்த அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் நேரில் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மாணவியின் கர்ப்பத்துக்கு அவளுடன் படித்து வரும் சக மாணவன் தான் காரணம் என தெரியவந்தது. இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மாணவனை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.
மாணவர்கள் காதல் விவகாரத்தில் ஈர்க்கப்பட்டது குறித்து தெரிந்தால் பெற்றோர் கவனமாக கையாள வேண்டும். இனக்கவர்ச்சியால் வரும் ஈர்ப்பை காதல் என்று நம்பி ஏமாறுவதை தடுக்க பெற்றோர் தான் பிள்ளைகளுடன் நட்புடன் பழக வேண்டும். வெளிப்படையாக பிள்ளைகள் தங்களிடம் சொல்லும் அளவிற்கு அவர்களை அணுக வேண்டும். இல்லாவிட்டால் காதல், கல்யாணம், கர்ப்பம் என்று வாழ்க்கையில் சிக்கலான நிலையை அடைந்த பின்னரே தெரிவிப்பார்கள். பல இடங்களில் சிக்கலை பார்க்கும் பெற்றோர், ஆசிரியர்களிடையே அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications