எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுங்க... தினகரனிடம் சராமரியாக கேள்வி கேட்ட நீதிபதி
அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையின் போது, டிடிவி தினகரனிடம் சராமாரியாக கேள்வி கேட்டார் நீதிபதி மலர்மதி.
சென்னை: குறுக்கு விசாரணையின் போது அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரவேண்டும் என்று கூறிய எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி, சராமாரியாக கேள்விகளை எழுப்பி தினகரனை திணறடித்தார்.
இங்கிலாந்தில் உள்ள வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப் பிரிவினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கைப் பதிவுசெய்தனர்.

இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் இந்த வழக்கு விசாரணை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் வரை குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணக்கு டிடிவி தினகரன் ஆஜரானார். அப்போது, விசாரணைக்கு முன்பே அமலாக்க துறை கேள்விகளை தரவேண்டும் என தினகரன் கோரிக்கை வைத்தார்.
தினகரன் கோரிக்கைக்கு நீதிபதி மலர்மதி கண்டனம் தெரிவித்தார். சிவில் நீதிமன்றம் போல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கிரிமினல் நீதிமன்றத்தில் உரிமையில்லை. அதுபோல், அமலாக்க துறையிடம் இந்த கேள்விகளை தான் கேட்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர் கேட்கக் கூடாது கூறினார்.
அமலாக்கத் துறை தங்களிடம் இந்தக் கேள்விகளை தான் கேட்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவரே கேட்பது கண்டிக்கத்தக்க ஒன்று. நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் வாங்கும் ஊதியத்திற்கு நான் வேலை செய்ய வேண்டும்.
குற்றம் சுமத்தப்பட்டவருக்கு சிவில் நீதிமன்றத்தில் இருப்பது போல, கிரிமினல் நீதிமன்றத்தில் உரிமை இல்லை என்று தெரிவித்தார். குறுக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராகாததால் ஏற்பட்ட விளைவுகள் இவை என்று தனது அதிருப்தியை வெளியிட்ட நீதிபதி மலர்மதி, விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தார்.
4 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கு விசாரணைக்கு கால அவகாசம் கேட்டார் டிடிவி தினகரன், அதற்கு நீதிபதி மலர்மதி அனுமதி அளிக்க மறுத்து விட்டார். கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் தர வேண்டும் என்று கூறிய நீதிபதி, சராமரியாக கேள்வி எழுப்பினார்.
வழக்கு விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதி, விசாரணையை விரைவில் முடித்து விரைவில் தீர்ப்பளித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications