கோவில் விழாவில் பூசாரி உயிரிழந்ததால் பரபரப்பு: புதுக்கோட்டையில் திருவிழாக்கள் நிறுத்தம்
புதுக்கோட்டை: கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரை அய்யனார் கோயில் திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான குதிரை எடுப்புத் திருவிழா நடத்தப்படுவதும் வழக்கம்.
15 நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கிய பிறகு மேற்பனைக்காடு கிராமத்தார்கள் செரியலூர் கிராமத்திற்கு வந்து மண்குதிரை செய்யும் கலைஞர்களிடம் குதிரை சிலைகள், அய்யனார் சிலை, மற்றும் கன்னிகள், பரிவார தெய்வங்கள் சிலைகள் செய்ய கேட்டுக்கு கொள்வார்கள். அதன் பிறகு சிலைகள் களிமண்ணில் செய்து வர்ணம் தீட்டப்பட்ட நிலையில் குதிரை எடுப்புத் திருவிழா நடத்தப்பட்டது.

மேற்பனைக்காடு கிராமத்தார்கள் சொன்னபடி செய்யப்பட்ட சிலைகளை தூக்கிச் செல்ல நேற்று மாலை வந்தனர். அதன் பிறகு குதிரை சிலைகள், அய்யனார் சிலை மற்றும் சுவாமி சிலைகளை பலர் தூக்கிச் செல்லும் விதமாக கம்புகள் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு ஆட்டம் பாட்டம், வானவேடிக்கைகளுடன் தூக்கிச் சென்றனர்.
சிலைகளை பொதுமக்கள் தூக்கிய போது மேற்பனைக்காட்டில் இருந்து வந்திருந்த பூசாரி ராசேந்திரன் (50). சாமியாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் போது மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனால் திருவிழாவும் நிறுத்தப்பட்டது. மேலும் இன்று நடக்க இருந்த பாட்டவசுவாமி கோயில் கல்லுப் பொங்கல் விழா, கிடா வெட்டு, குறி சொல்லுதல் போன்ற நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications