தீபா பேரவையில் தொடரும் வெட்டு குத்து- நிர்வாகிக்கு மாஜி எம்.பி அர்ச்சுணன் பளார் விட்டதால் பரபரப்பு!
சேலத்தில் தீபா பேரவை நிர்வாகி ஒருவரை முன்னாள் எம்.பி. அர்ச்சுணன் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்: எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை தொடங்கியது முதலே அந்த அமைப்பில் வெட்டு குத்து தொடர் கதையாகி வருகிறது. தற்போது சேலத்தில் தீபா பேரவை நிர்வாகி ஒருவரை முன்னாள் எம்.பி. அர்ச்சுணன் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை கடந்த மாதம் 25-ந் தேதி தீபா தொடங்கினார். பேரவையை தொடங்கி ஒரு மாதத்திற்குள் நிர்வாகிகள் நியமிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது.

ஒரே குடும்பத்தில் இருந்தாலும் தீபாவுக்கும் அவருடைய கணவர் மாதவனுக்கும் இடையேயான சண்டையில் பேரவை நிர்வாகிகள் நியமிப்பதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேர்வை சார்பாக மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் இன்று காலை சேலம் நேஷனல் ஓட்டலில் நடைபெற்றுது.
முன்னாள் எம்பி அர்ச்சுனன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அதன்பின் நகரம், ஒன்றியம், பேரூராட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
அப்போது தாரமங்கலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஏன் எங்களுக்கு இது குறித்து முன்பே சொல்லவில்லை என்று அர்ச்சுனனிடம் மல்லுக்கட்டினார். இதனால் கோபமடைந்த அர்ச்சுனன் ராஜ்குமாரின் கன்னத்தில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் தனது இடது கன்னம் வீங்கி விட்டதாக ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications