திமுகவில் செயல் தலைவராகும் மு.க.ஸ்டாலின்! பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி!!
சென்னை: திமுக பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு விரைவில் துணைத் தலைவர் அல்லது செயல் தலைவர் பதவி வழங்கப்பட இருப்பதாகத் தெரிகிறது. இதனால் ஸ்டாலினின் பொருளாளர் பதவியைப் பெறுவதில் கட்சியில் பெரும் போட்டி நிலவுகிறது.
திமுகவில் ஸ்டாலினுக்கு முதலில் பொதுச்செயலர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் நீண்டகால பொதுச்செயலரான அன்பழகன், தமது பதவியை விட்டுத்தர முன்வரவில்லை.
இதனால் ஆற்காடு வீராசாமி வசம் இருந்த பொருளாளர் பதவி, ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டது. தற்போது திமுகவில் ஸ்டாலினுக்கு துணைத் தலைவர் அல்லது செயல் தலைவர் என்ற பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அப்படி ஸ்டாலினுக்கு புதிய பதவி வழங்கப்பட்டால் பொருளாளர் பதவியை தனக்கு வாங்கிவிடுவது என்பதில் துணை பொதுச்செயலர் துரைமுருகன் வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறாராம். கருணாநிதி தமக்கே அப்பதவியை பெற்றுத் தருவார் என மலைபோல நம்பிக் கொண்டிருக்கிறாராம்.
ஆனால் திண்டுக்கல் ஐ.பெரியசாமியை சில மாவட்ட செயலர்கள் முன்னிறுத்துகிறார்களாம். ஐ. பெரியசாமியும் தனது மகனை மாவட்ட செயலராக்கிவிட்டு மாநில பொறுப்புக்கு சென்றே தீருவேன் என்று சபதம் போட்டிருக்கிறாராம்.
அதே நேரத்தில் ஐ.பெரியசாமிக்கு இந்த பதவி கிடைக்கக் கூடாது என்று சில மாவட்ட செயலர்கள் லாபியில் ஈடுபட்டும் வருகின்றனராம்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications