ஆர்.கே.நகரில் இன்று வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்- வாகன சோதனைகள் தீவிரம்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7-ந் தேதியாகும்.
டிசம்பர் 21-ந் தேதி பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 24-ந் தேதி எண்ணப்படுகின்றன. இடைத் தேர்தலையொட்டி ஆர்.கே.நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே இரவு நேரத்தில் வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்.கே.நகரில் வாகன் சோதனைகளும் தீவிரமடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications