லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்தது!!
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 24-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது.
நேற்று வரை தமிழகம் முழுவதும் 758 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கு 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருமாவளவன்
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

டி.ஆர். பாலு
தஞ்சாவூர் திமுக வேட்பாளர் டி.ஆர் பாலு, காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

சுதீஷ்
சேலத்தில் தேமுதிக இளைஞர் அணி செயலாளர் சுதீஷ், காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மகர பூஷணத்திடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பாரிவேந்தர்
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர், மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமதுவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கோவை சி.பி. ராதாகிருஷ்ணன்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் கணேஷ்குமார் ஆகியோர் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கரூர் சின்னசாமி, ஜோதிமணி
கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, திமுக வேட்பாளர் சின்னச்சாமி ஆகியோர் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

இன்றுடன் முடிவடைந்தது
இன்று கடைசி நாள் என்பதால் காலை முதல் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக இருந்தது. மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications