ஆட்சியின் கடைசி ஆண்டில் அம்மா பிறந்த நாள்.. பம்மும் திரையுலகம்!
பொதுவாக ஆட்சிக் கட்டிலில் யார் அமர்ந்திருந்தாலும் அவர்களுக்கு சாமரம் வீசியே பழக்கப்பட்டவர்கள் சினிமாக்காரர்கள். அது கருணாநிதியாக இருந்தாலும், ஜெயலலிதாவாக இருந்தாலும் பாராட்டுவதிலும் புகழ் மொழிகள் பொழிவதிலும் வஞ்சனை பார்க்க மாட்டார்கள்.
கடந்த முறை திமுக ஆட்சிக் காலத்தில், கிட்டத்தட்ட 5 ஆண்டுகளும் கருணாநிதிக்கு பாராட்டு நடத்துவதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருந்தது தமிழ்த் திரையுலகம். சினிமா எடுப்பதெல்லாம் இரண்டாம்பட்ச வேலைதான்.
ஆட்சி மாறியது. அம்மா வந்தார். சினிமாக்காரர்களுக்கு மட்டும் 'ஸ்ட்ரிக்ட்லி நோ பர்மிஷன்' என்று எழுதி ஒட்டாத குறையாக உத்தரவு போட்டிருந்தார்.

இடையில் ரஜினி, நடிகர் சங்கம், பிலிம் சேம்பர் என சில விதிவிலக்குகள். ஆனாலும் இந்த நிமிடம் வரை திரையுலகினரை வெகு தூரத்திலேயே வைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
அவர் அப்படி தள்ளி வைத்திருந்தாலும், தங்களை அவரது பக்தர்களாக, தீவிர விசுவாசிகளாகக் காட்டிக் கொள்வதில் திரையுலகின் முக்கிய அமைப்புகள், பிரமுகர்கள் தீவிரமாக இருந்தனர். திரைத் துறை தொடர்பாக முதல்வர் சின்ன அறிவிப்பு வெளியிட்டாலும் கூட அவருக்கு விழுந்தடித்துக் கொண்டு நன்றி தெரிவித்து விளம்பரங்கள் வெளியிட்டு வந்தனர். ஜெயலலிதா பிறந்த நாள் என்றால் வேப்பிலை கட்டி ஆடிய அமைச்சர்களுக்கு இணையாக வேலைப் பார்த்தனர்.
அதுவும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்து, அவர் சிறை சென்ற நேரத்தில் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதங்களும், போராட்டங்களும் எந்த டிவியிலும் வராத மெகா சென்டிமென்ட் சீரியல்!
ஆறு மாதங்களுக்கு முன்பு வரை நிலைமை இப்படித்தான் இருந்தது.
இன்று....?
ஜெயலலிதாவின் ஆட்சி முடிய இன்னும் 2 மாதங்கள்தான் உள்ளன. அடுத்த தேர்தல் முடிவுகள் நிச்சயமற்றதாகத் தெரிகின்றன. இந்த நிலையில் இன்று முதல்வரின் பிறந்த நாள். திரையிலகில் எவராவது வாழ்த்து தெரிவித்து விளம்பரமோ, கோயில்களில் அபிஷேக ஆராதனைகளோ நடத்தினார்களா... ம்ஹூம். குறைந்தபட்சம் வெளிப்படையாக பிறந்த நாள் வாழ்த்துக் கூடத் தெரிவிக்கவில்லை.
அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை... அவர்கள் கவலை அவர்களுக்கு. இதையெல்லாம் நன்கு உணர்ந்ததால்தான் ஆரம்பத்திலேயே சினிமாக்காரர்களை எட்ட நிற்க வைத்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா என்பது முதல்வர் அலுவலக அதிகாரிகள் அடிக்கும் கமெண்ட்!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications