விவேக் மகன் உடலைப் பார்த்து கதறிய விஷால், பிரபுதேவா
சென்னை: கடும் காய்ச்சலால் மரணமடைந்த நடிகர் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் உடலைப் பார்த்து கதறி அழுதனர் நடிகர் விஷாலும் பிரபு தேவாவும். திரையுலகினர் பலரும் விவேக்குக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
நடிகர் விவேக் மகன் காய்ச்சலால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 13.

சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த பிரசன்ன குமார், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், காய்ச்சல் குணமாகவில்லை.
இதற்காக சென்னை வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 40 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விவேக்கும், மனைவி அருள்செல்வியும் அருகில் இருந்து மகனை பார்த்துக்கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று பிரசன்ன குமாரின் உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் பலன் இல்லாமல், மரணம் அடைந்தார்.
பிரசன்ன குமாரின் உடல் மருத்துவமனையிலிருந்து விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள விவேக்கின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமாரின் மரணம், அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல், திரையுலகினரையும் பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் விவேக் வீட்டு முன்பு திரண்டு நின்றார்கள்.
சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் ஆகியோர் பிரசன்னகுமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் விவேக்கைப் பார்த்ததும் கதறி அழுதார். அதேபோல பிரபுதேவா துயரத்தில் அழுதார். இதே போல தன் மகனைப் பறி கொடுத்தவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சந்தானம், தாமு, கரண், உதயா, சிங்கம் புலி, சிங்கமுத்து, சூரி, மனோபாலா, நடிகைகள் விந்தியா, சரண்யா, லலிதகுமாரி, கும்தாஜ், இயக்குநர்கள் கரு பழனியப்பன், எஸ்பி ஜனநாதன், ஹரி, தங்கர்பச்சான், டி.பி.கஜேந்திரன், தயாரிப்பாளர் ஜி.தியாகராஜன் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பிரசன்னகுமார் உடல் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, விருகம்பாக்கம் இளங்கோ நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications