தலைவர்கள். திரையுலகினர் அஞ்சலியுடன் பிலிம் நியூஸ் ஆனந்தன் உடல் தகனம்!
சென்னை: தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன் (வயது 91) உடலுக்கு திமுக பொருளாளர் முக ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார் ஆனந்தன். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று முதல் இன்று காலை வரை வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று அவரது உடலுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா, வசந்த் குமார், ஆனந்த் ராஜ், சூர்யா, சிவக்குமார், பிரபு, ராம்குமார், பிரபு அண்ணன், உதயநிதி ஸ்டாலின், பார்த்தீபன், எஸ்.ஏ. சந்திரசேகரன், சின்னிஜெயந்த், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் அமீர், எஸ்பி ஜனநாதன், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 10.30 மணிக்கு பிலிம்நியூஸ் ஆனந்தன் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications