முத்துக்குமார் இறந்ததை நம்பவே முடியவில்லை.. ஜி.வி பிரகாஷ்; இதயமே நொறுங்கி விட்டது.. அதர்வா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணம் திரையுலகை உலுக்கிப் போட்டுள்ளது. யாராலும் அவரது மரணத்தை நம்ப முடியவில்லை. முத்துக்குமார் இறந்து விட்டாரா என்றுதான் அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் உள்ளனர்.

நா. முத்துக்குமாரின் மரணச் செய்தி பரவிய வேகத்தில் அவரது மரணத்திற்கு இரங்கல்கள் குவிந்து வருகின்றன. திரையுலகினர் பலரும் டிவிட்டர், பேஸ்புக்கில் தங்களது சோகத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவருடன் பணிபுரிந்த பலரும் அவரது மரணத்தால் பெரும் சோகமாகியுள்ளனர். அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உள்ளனர்.

நம்ப முடியவில்லை -ஜிவி பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நா. முத்துக்குமாருடன் நெருக்கமாக பழகி வந்தவர். இருவரது கூட்டில் வெளியான பாடல்கள் பல சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. முத்துக்குமாரின் மறைவு குறித்து பிரகாஷ் வெளியிட்டுள்ள டிவிட்டில், என்னால் நம்ப முடியவில்லை. எனது படங்களில் மட்டும் 200 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். மிகப் பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு கடவுள்தான் பலம் தர வேண்டும் என்று வேதனை வெளியிட்டுள்ளார்.

அதிர்ச்சியாக இருக்கிறது - நடிகர் பிரசன்னா

நடிகர் பிரசன்னா வெளியிட்டுள்ள டிவிட்டில், அதிர்ச்சியாக இருக்கிறது. பெரும் சோகமாக இருக்கிறது. மிக மிக அவசரமான மரமம் இது. அவரை அத்தனை பேரும் மிஸ் செய்வோம்.

ஷாக்கிங் செய்தி இது...சரத்குமார்

நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள செய்தியில் கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா. முத்துக்குமார் நம்முடன் இல்லை என்பது அதிர்ச்சி தருகிறது. ஒரு நல்ல ஆத்மாவை நாம் இழந்துள்ளோம் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

அதிர்ச்சி தருகிறது.. நடிகர் கணேஷ் வெங்கட்ராம்

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் வெளியிட்டுள்ள செய்தியில், அதிர்ச்சி தருகிறது. பெரும் வேதனையாக உள்ளது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

உங்களை மிஸ் பண்ணுவோம்... நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள டிவிட்டில், நா. முத்துக்குமார் சாரின் மரணச் செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது. அவரது குடும்பத்துக்கு எனது இரங்கல்கள். அவரை அனைவரும் மிஸ் செய்வோம் என்று கூறியுள்ளார்.

நம்பவே முடியவில்லை.. நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள டிவிட்டில், என்னால் நம்பவே முடியவில்லை. சாகும் வயதா இது. கடவுல் அவரது குடும்பத்துக்குப் பலம் தரட்டும். மிகப் பெரிய இழப்பு. மிக மிக சோகமான நாள் இன்று என்று வேதனையை வெளியிட்டுள்ளார்.

மிகப் பெரிய இழப்பு... பாடகி சின்மயி

பாடகி சின்மயி வெளியிட்டுள்ள செய்தியில், திரைத்துறைக்கு மிகப் பெரிய மிக மோசமான இழப்பாகும் இது. மிக மிக துரிதமான மரணம் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய இழப்பு..ஆதிக் ரவிச்சந்திரன்

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில், திரைத்துறைக்கு இன்னொரு மிகப் பெரிய இழப்பு. அவரது மரணச் செய்தி அதிர்ச்சி தருகிறது. என்ன ஒரு திறமையான பாடலாசிரியர் என்று கூறியுள்ளார்.

இதயம் உடைந்து சிதறியது போல உள்ளது... நடிகர் அதர்வா

நடிகர் அதர்வா வெளியிட்டுள்ள செய்தியில், இதயமே சுக்கு நூறாக நொறுங்குவது போல உள்ளது. நா. முத்துக்குமார் சாரின் மரணத்தை நம்ப முடியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்துக்கு அனைத்துப் பலமும் கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார் அதர்வா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+