இறுதி வெற்றி நமக்கே என்பதை நினைவில் கொள்ளுங்கள்: ஜெயலலிதா அதிரடி அறிக்கை
சென்னை: நமது நடவடிக்கைகள் தெளிவாக, மன உறுதியுடன் இருந்தால், இறுதி வெற்றி நமக்கே என்பதை தொண்டர்கள் நினைவில் கொண்டிருக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் அன்புக்குரிய தொண்டர்கள், என் மீது கொண்ட பேரன்பு காரணமாக சில சந்தர்ப்பங்களில் என்னை குறித்து கவலையுற்று துயரமான முடிவுகளுக்கு ஆளாகி விடுகின்றனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. எந்த சூழ்நிலையிலும் மன உறுதியுடன், தெளிவாக நமது நடவடிக்கைகள் அமையும்போது, இறுதி வெற்றி நமக்கே என்பதை தொண்டர்கள் எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சமீபத்தில், புதுக்கோட்டை மாவட்டம், குண்டாண்டார்கோவில் ஒன்றியம், உப்பிலிக்குடி ஊராட்சி, கன்னியாப்பட்டி கிளை பொருளாளர் ஆர்.ஜெயக்குமார் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
ஜெயக்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
சொத்து வழக்கில் கர்நாடகா அப்பீலுக்கு செல்ல உள்ளதை கேள்விப்பட்டு அதிமுக தொண்டர் மரணமடைந்த நிலையில், வழக்கின் இறுதியில் வெற்றி தனக்கே கிடைக்கும் என்பதை ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications