6 மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்த நிதி நிறுவன அதிபர்
தர்மபுரி: தர்மபுரி அருகே 6 மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோ எடுத்த நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தைவெளியைச் சேர்ந்தவர் சிவராஜ்(42). நிதி நிறுவன அதிபரான அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். அவரது செல்போன் பழுதானதால் அதை அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கொடுத்து சரி செய்யுமாறு தெரிவித்துள்ளார். கடை ஊழியர் மெமரி கார்டை பார்த்தபோது அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இருந்தன.
இதை அந்த நபர் டவுன்லோடு செய்து தனது நண்பர்களுக்கு கொடுத்தார். மேலும் அதை சிடியாகவும் பலருக்கு கொடுத்தார். இந்த வீடியோ வேகமாக பரவ அது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்போன் கடையில் இருந்து தான் வீடியோ பரவியது தெரிய வந்து அங்கு சென்றனர். கடை ஊழியரை விசாரித்தபோது அந்த வீடியோ சிவராஜின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அவர் தெரிவித்தார்.
தன்னிடம் கடனுக்கு பணம் கேட்டு வந்த பெண்களை தனது பண்ணை வீட்டில் வைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்ததுடன் அவர்களுக்கே தெரியாமல் அதை வீடியோ எடுத்துள்ளார் சிவராஜ். கடந்த 6 மாதத்தில் மட்டும் அவர் 67 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதில் 27 பேருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் போலீசிடம் சிக்கின.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவராஜை கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications
