புகார் கொடுத்தவர் சமாதானமாக செல்ல முடிவு... அழகிரி மனைவி மீதான நில முறைகேடு வழக்கு ரத்து
மதுரை: திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீதான நில முறைகேடு வழக்கை ரத்து செய்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியின் மனைவி காந்தி. இவர் மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் ராமமூர்த்தி என்பவரின் குடும்பத்திற்குச் சொந்தமான இடத்தை முறைகேடாக வாங்கியதாக, ராமமூர்த்தியின் மனைவி ராஜேஸ்வரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காந்தி அழகிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி காந்தி அழகிரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி சுந்தரேஷ் விசாரித்தார். அப்போது புகார் அளித்த ராஜேஸ்வரி சமாதானமாகச் செல்வதாக கூறினார். அதனைத் தொடர்ந்து காந்தி அழகிரி மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் உத்தரவிட்டார்.
முன்னதாக காந்தி, புகார் கொடுத்த ராஜேஷ்வரி, அவரது மருமகள் துரைப்பாத்தியம்மாள் மருமகன் கே.ராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர். அதில் தங்களுக்குள் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்வதாக கூறியிருந்தனர். இதை ஏற்று நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications