சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டூல் வேன் ரயில் பெட்டியில் தீ விபத்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10வது நடைமேடையில் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதலுதவி ரயில் பெட்டியில் உயர் மின் கம்பி அறுந்து விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட உடன் சம்பவ இடத்திற்கு வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பெட்டியில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ஆவணங்களும் எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

டூல் வேன் என்ற இந்த ரயில் பெட்டியை உடனடியாக பிரித்து எடுத்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் பெட்டியில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications