மதுரை காமராஜர் பல்கலையில் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசம்
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வளாகத்தில் உள்ள விருந்தினர்கள் தங்கும் மாளிகைக்கு தீ வைத்து சென்றுள்ளனர். சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருந்தினர் மாளிகை கண்காணிப்பாளரை அறையில் அடைத்து வைத்து விட்டு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

விருந்தினர் மாளிகையில் யார் யார் தங்கி உள்ளனர் என கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மர்ம நபர்கள் தீ வைத்ததில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
மேலும் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications