நெல்லையில் பரபரப்பு.. அதிமுக எம்.பி., மேயர் கலந்துகொண்ட விழாவில் திடீர் தீ விபத்து
நெல்லை: நெல்லையில் அதிமுக எம்.பி., விஜிலா சத்தியானந்த் மற்றும் மேயர் புவனேஷ்வரி கலந்துகொண்ட விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சாமியான பந்தல், சேர்கள் எரிந்து நாசமானது.
நெல்லை அடித்த பேட்டை கோடீஸ்வரன் நகரில் இன்று மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக மகளிரணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்.பி மற்றும் நெல்லை மேயர் புவனேஷ்வரி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

அவர்களை வரவேற்பதற்காக கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் பட்டாசு விழுந்து தீ பிடித்தது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பந்தலினுள் இருந்த பிளாஸ்டிக் சேர்களில் பற்றியது.

இதில் சாமியான பந்தல் மற்றும் 7 சேர்கள் தீயில் எரிந்து நாசமாகின. அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள வீடுகளில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications