நான்குவழிச் சாலையில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ... அதிர்ஷ்டவசமாக 8 பேர் உயிர் தப்பினர்
நெல்லை: நெல்லை அருகே நான்கு வழிசாலையில் திடீரென ஆட்டோ ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 8 பேரும் உயிர் தப்பினர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை காமராஜர் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. மாட்டு வியாபாரியான இவர் பாளை ரெட்டியார்பட்டியில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்திருந்த நாகர்கோவிலை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மாரியம்மாளிடம் அவர் வளர்த்து வரும் மாடுகளை வாங்க விலை பேசினார்.

கோவில் கொடை விழா முடிந்ததும் லோடு ஆட்டோவில் மாரியம்மாள், அவரது மூன்று குழந்தைகள் மற்றும் உறவினர்களான மகேந்திரன், இசக்கிமுத்து, காளிமுத்து ஆகியோருடன் தனது ஆட்டோவில் புறப்பட்டார். ஆட்டோவை சின்னதுரை ஓட்டினார்.
நான்குநேரி அடுத்து மறுகால்குறிச்சி நான்குவழி சாலை விலக்கு அருகே வந்த போது ஆடடோவின் முன் பகுதியல் திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னதுரை ஆட்டோவை சாலையோரத்தி்ல் நிறுத்தி விட்டு பார்ப்பதற்குள் தீ மளமளவென பரவியது.
ஆட்டோவில் பயணித்த மாரியம்மாள் உள்ளிட்டோர் பதறி அடித்து வேகமாக இறங்கி உயிர் தப்பினர். இதுகுறித்து நெடுஞ்சாலை பராமரிப்பு துறையினர் அளித்த தகவலின் பேரில் நான்குநேரி தீயணைப்பு நிலைய அலுவலர் வெட்டும்பெருமாள் தலைமையில் மீட்பு குழுவினர் வந்து தீயை அணைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என விசாரணை நடந்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications