விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. ஒருவர் காயம்.. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
விருதுநகரில் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: விருதுநகரில் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஏழாயிரம்பண்ணையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் வரிசையாக அருகே உள்ள கட்டிடங்களில் தீ பிடித்தது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பட்டாசு தொழிற்சாலைக்கு விரைந்துள்ளனர். ஆனால் உள்ளே வெடிமருந்து இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகிறார்கள்.
இப்போது வரை ஆலையில் வேலை பார்த்த ஒரு ஊழியர் மட்டும் காயத்துடன் மீட்கப்பட்டார். படுகாயம் அடைந்து இருக்கும் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆலைக்கு உள்ளே இன்னும் எத்தனை ஊழியர்கள் இருக்கிறார்கள் என்று இதுவரை விவரம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications