தி.நகர் சென்னை சில்க்ஸ் அருகே ஹோட்டலில் திடீர் தீ விபத்து!
தியாகராயர் நகர் சென்னை சில்க்ஸ் அருகே ஹோட்டல் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் அருகே உள்ள உணவகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் சில நாட்களுக்கு முன்னர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சென்னை சில்க்ஸின் 7 மாடி கட்டிடமே பற்றி எரிந்தது.

இதையடுத்து சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை ராட்சத இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 3-வது நாளாக சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள உணவகத்தில் இன்று மாலை திடீரென தீபிடித்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.












Click it and Unblock the Notifications