புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீ விபத்து.. நோயாளிகள் பீதி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
புதுச்சேரியில் புகழ்பெற்ற ஜிப்மர் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. தமிழகத்தில் இருந்தும் நிறைய நோயாளிகள் அங்கு சிகிச்சை பெறச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், இன்று காலை ஜிப்மர் மருத்துவமனையின், 2வது தளத்திலுள்ள புற நோயாளிகள் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தகவல் அறிந்ததும், தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு சூழல் நிலவுகிறது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications