சிவகாசி: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி: 10 கடைகள் எரிந்து நாசம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சிவகாசி நாரணாபுரம் சாலையில் உள்ள பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 10 க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி சேதமடைந்தன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் சாலையில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. காற்றின் வேகத்தினால் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள 10 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மளமளவென பரவியது.

 fire at Sivakasi cracker shop

கடைகளில் பற்றிய தீயில் சாலையோரம் இருந்த ஒருவர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி நகர தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

 fire at Sivakasi cracker shop

தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகையினால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் கடுமையான பாதிக்கப்பட்டனர். இதனால் சிவகாசி - விருதுநகர் சாலையில் போக்குவருத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+