கோயில் திருவிழாவிற்காக வாங்கி வைத்த வெடியால் வந்த வினை.. திடீரென வெடித்து 2 குழந்தைகள் படுகாயம்
கோயில் திருவிழாவிற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த வெடி திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
நெல்லை: கடையநல்லூர் அருகே கோவில் திருவிழாவிற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த வெடி வெடித்து விபத்து ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் கோயில் திருவிழா நடக்க உள்ளது. இந்தத் திருவிழாவின் போது வெடிகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம்.

இதனால், கடையநல்லூரில் உள்ள ஒரு குடும்பத்தில் நிறைய வெடி பொருட்களை வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளனர். கொண்டாட்டத்திற்காக வாங்கி வைத்திருந்த வெடிப் பொருட்கள் இன்று காலை திடீரென வெடித்தது.
இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அனைவரும் உடனடியாக நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெடி விபத்து தொடர்பான தகவல் கிடைத்த உடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்திற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications