மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல் விபத்து... செக்யூரிட்டியின் கால் நசுங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் முதல் விபத்து நடந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் அலை அலையாக மெட்ரோ ரயில் பயணத்தை அனுபவித்து வருகின்ரனர். இந்த நிலையில் கோயம்பேடு ரயில் நிலையத்தில் நேற்று மாலை ஒரு சிறிய விபத்து நடந்தது.

நேற்று விடுமுறை என்பதால் கோயம்பேடு நிலையத்தில் கூட்டம் அலை மோதியது. அப்போது பெரிய இரும்பு ஸ்லைடிங் கேட் ஒன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு செக்யூரிட்டியின் காலில் வந்து விழுந்தது. இதில் கால் நசுங்கி அவர் வலியில் அலறினார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டனர். பின்னர், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications