நெல்லை வந்தது 2,330 மெட்ரிக் டன் யூரியா உரம்: விவசாயிகள் மகிழ்ச்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் எழுந்துள்ள யூரியா உரத் தட்டுபாட்டைப் போக்கும் நடவடிக்கையாக, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் 2,330 மெட்ரிக் டன் யூரியா உரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மூட்டை ஒன்று ரூ.270-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. மானாவாரி, பாசனக் குளங்களும் நிரம்பி வருகின்றன. இதையடுத்து, பிசான பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நெல், சிறுதானியப் பயிர்களுக்குத் தேவையான யூரியா உரம் தட்டுப்பாடு எழுந்துள்ளது.

85000 ஹெக்டேர் சாகுபடி
இம்மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 85,000 ஹெக்டேர் சாகுபடி செய்யும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கேற்ப சாகுபடிக்குத் தேவையான உரம், பூச்சி மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யூரியா தட்டுப்பாடு
யூரியா தட்டுப்பாடு: திருநெல்வேலி மாவட்டத்தில் 10,370 மெட்ரிக் டன் யூரியா தேவை என்ற நிலையில், 1,000 மெட்ரிக் டன் மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் இருப்பு இருந்தது. யூரியா உரம் தட்டுப்பாடு எழுந்ததால் தனியார் விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது.
2,800 மெட்ரிக்டன் உரம்
இந்நிலையில், ரயில் மூலம் சிவகங்கை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தனியார் விற்பனை நிலையங்களுக்கு 2,800 மெட்ரிக் டன் யூரியா உரம் திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது. இதிலிருந்து வேளாண் துறைக்கு 1,000 மெட்ரிக் டன் உரம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
270க்கு விற்பனை
நெல்லை மாவட்டத்தில் உடனடியாகத் தேவையுள்ள சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் யூரியா உரம் மூட்டை ஒன்று ரூ.270-க்கு செவ்வாய்க்கிழமை முதல் (நவம்பர் 11) விற்பனை செய்யப்படுவதாக திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் கூறியுள்ளார்.
குஜராத் உரம்
குஜராத் மாநிலத்திலிருந்து மற்றொரு ரயிலில் 1330.80 மெட்ரிக் டன் யூரியா உரம் வந்து கொண்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை இந்த உரமும் மாவட்ட முழுவதும் ஒதுக்கீடு செய்யப்படும்.
கப்பல் மூலம் உரம்
அடுத்த 2 தினங்களில் ஓமன் நாட்டில் இருந்து கப்பல் மூலம் 2,800 மெட்ரிக் டன் உரம் கொண்டுவரப்படுகிறது. அடுத்த 2 வாரங்களுக்குத் தேவையான யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று செ. சந்திரசேகரன் கூறியுள்ளார்.
பதுக்கினால் எச்சரிக்கை:
தனியார் விற்பனையாளர்கள் உரங்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்யக்கூடாது. மேலும், காலாவதியான பூச்சிமருந்துகளை விற்பனை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. அவ்வாறு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் உரம் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், முகவர்கள் விவசாயிகள் பாதிக்கப்படாதவகையில் உரம், பூச்சி மருந்துகளை வேளாண் துறையின் அறிவுரையின்படி விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலிக்கு ரயிலில் வந்துள்ள யூரியா உரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செ. சந்திரசேகரன் கூறினார்.
திருச்சி,புதுக்கோட்டை,கரூர்,அரியலூர்,பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு தேவையான 2300 டன் யூரியா ஓமன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு,காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து திருச்சிக்கு வந்து சேர்ந்தது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications