For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நூறு பாட்ஷா + முள்ளும் மலரும் = கபாலி... ரசிகர்கள் கொண்டாட்டம் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: நூறு பாட்ஷா + முள்ளும் மலரும் = கபாலி. ரஞ்சித் இயக்கத்தில் தலைவர் படம் செம மிரட்டலாக வந்துள்ளதாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் முதல் பிரீமியர் ஷோ பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர்.

உலகம் முழுவதும் கபாலி ஜூரம் உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் இருக்கும் இடமெல்லாம் கபாலி குறித்த பேச்சுதான். இந்நிலையில் கபாலி படத்தின் பிரீமியர் காட்சிகள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் திரையிடப்பட்டன.

 first premier show audience responce of Kabali

படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரு வழியாக படம் பார்த்த ரசிகர்கள் தற்போது ரஜினியை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

பொதுவாக ரஜினி படம் என்றாலே ஒரு க்ரேஷ் உண்டு. கபாலியில் முதல் 30 நிமிட காட்சிகள் வழக்கமான ரஜினி சாயலில் இருப்பதாகவும், அடுத்த 60 நிமிட காட்சிகள் முள்ளும் மலரும் ரஜினி ஸ்டைலில் உள்ளதாகவும், இதற்கு பின்னர் வரும் 60 நிமிட காட்சிகள் பாட்ஷா ரஜினியை கண் முன்னே நிறுத்துவதாக இருக்கிறதாம். முதல் பாதியில் ரஜினி வரும் சீன்கள் செம மாஸ்.

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரஞ்சித் மெருகேற்றியுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். கடைசி வரையிலும் ரஜினி வரும் காட்சிகள் செம மெர்சலாக அமைந்துள்ளதாகவும். நெருப்புடா பாடல்கள் தியேட்டரில் செம மாஸ் எனவும் படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும், ரஜினிக்கு தேசிய விருது கிடைப்பது நிச்சயம் என்கின்றனர் ரசிகர்கள்.

English summary
After the first premier show of Kabali, most of the spectators pouring praises on Rajinikanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X