For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்முறையாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கருணாநிதி! ஆடிப்போன தொண்டர்கள்!

திமுக தலைவர் கருணாநிதி முதல் முறையாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கருணாநிதி- கண்ணீர் விட்ட ஸ்டாலின்- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி முதல் முறையாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    திமுக தலைவர் கருணாநிதி சிறுநீர்பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கோபாலபுரம் வீட்டிலேயே கடந்த 3 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டது.

    அவரை பல்வேறு கட்சித் தலைவர்களும் திமுக தொண்டர்களும் சந்திக்க திரண்டனர். கருணாநிதியின் குடும்பத்தாரிடம் அவர்கள் நலம் விசாரித்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

    ரத்த அழுத்தம் குறைவு

    இந்நிலையில் நேற்றிரவு 12.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை மோசமானது. அவருக்கு ரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்டது.

    விரைந்த தலைவர்கள்

    விரைந்த தலைவர்கள்

    இதையடுத்து காவிரி மருத்துவமனை மருத்துவக்குழு கருணாநிதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஆ ராசா, துரைமுருகன், டி ஆர் பாலு உள்ளிட்டோர் கோபாலபுரம் வீட்டிற்கு விரைந்தனர்.

    ஆம்புலன்ஸ்

    ஆம்புலன்ஸ்

    இதைத்தொடர்ந்து கோபாலபுரம் வீட்டிற்கு மின்னல் வேகத்தில் வந்தது காவிரி மருத்துவமனை ஆம்புலன்ஸ். ஆம்புலன்ஸை கண்டதும் அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் கத்தி ஆரவாரம் செய்து கொந்தளித்தனர்.

    முதல்முறையாக ஆம்புலன்ஸில்

    முதல்முறையாக ஆம்புலன்ஸில்

    இதையடுத்து வீட்டின் மேல் தளத்தில் இருந்து தரை தளத்துக்கு ஸ்ட்ரெச்சர் மூலம் கொண்டு வரப்பட்ட கருணாநிதி ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார். முதல்முறையாக ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார் கருணாநிதி.

    கண்ணீர்

    கண்ணீர்

    இதனைக்கண்ட ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கண் கலங்கினர். கருணாநிதி, கனிமொழி ஆ ராசா உள்ளிட்டோருடன் வந்த வேகத்தில் மருத்துவமனைக்கு புறப்பட்டது ஆம்புலன்ஸ்.

    சொந்தக் கார்

    சொந்தக் கார்

    கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதி இதுவரை ஒரு முறை கூட ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில்லை. தனது சொந்த காரிலேயே தனக்கான பிரத்யோக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே சென்று வந்தார் கருணாநிதி.

    ஆடிப்போன தொண்டர்கள்

    ஆடிப்போன தொண்டர்கள்

    இந்நிலையில் நேற்று முதல் முறையாக ஆம்புலன்ஸில் அதுவும் படுத்த படுக்கையாக ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார் கருணாநிதி. இதனைக்கண்ட திமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் ஆடிதான் போயினர் என்பதை மறுப்பதற்கில்லை.

    English summary
    DMK leader Karunanidhi has been admitted in the Cauvery hospital. First time Karunanidhi has gone to hospital by Ambulance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X