தமிழக சட்டசபையில் முதல் முறையாக அசுர பலத்துடன் அமரும் எதிர்க்கட்சி
சென்னை: தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக அசுர பலத்துடன் அதாவது 89 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சியாக திமுக அமருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. திமுக 89; காங்கிரஸ் 8; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்தில் வென்றுள்ளது.
தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக பலமான எதிர்க்கட்சியாக 89 எம்.எல்.ஏ.க்களுடன் அமருகிறது.

எதிர்க்கட்சியாக இ.கம்யூ
1952-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 162 இடங்களில் வென்று ஆளும் கட்சியாக அமர்ந்தது. அத்தேர்தலில் 62 இடங்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

திமுக
1957-ம் ஆண்டு 151 இடங்களில் வென்றது காங்கிரஸ். திமுக 15 இடங்களுடன் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. 1962-ல் 139 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்ற திமுக 50 இடங்களுடன் எதிர்க்கட்சியாக இருந்தது.

காங்கிரஸ்
1967-ல் 137 இடங்களை திமுக வென்று முதல் முறையாக அரியாசனத்தில் அமர்ந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி 51 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. 1971-ல் திமுக 184 தொகுதிகளில் வெல்ல காங்கிரஸ் 15-ல் மட்டுமே வென்று பிரதான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தது.

மீண்டும் திமுக
1977-ல் 130 தொகுதிகளைக் கைப்பற்றி அதிமுக முதல் முறையாக ஆட்சியில் அமர திமுக 48 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. 1980-ல் 129 தொகுதிகளில் அதிமுக வெல்ல 37 இடங்களில் வென்ற திமுக எதிர்க்கட்சியானது. 1984-ல் அதிமுக 132 இடங்களில் வென்ற போது காங்கிரஸ் கட்சி 61 இடங்களுடன் எதிர்க்கட்சியானது.

எதிர்க்கட்சியாக அதிமுக
1989-ல் திமுக 150 இடங்களில் வெல்ல 27 தொகுதிகளுடன் அதிமுக முதல் முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. 1991-ல் அதிமுக 164 தொகுதிகளில் வென்றபோது காங்கிரஸ் கட்சி 60 இடங்களுடன் எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

தமாகா
1996-ல் 173 தொகுதிகளில் திமுக வெல்ல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளுடன் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்தது. 2001ல் அதிமுக 132-ல் வெல்ல திமுக 31; 2006-ல் திமுக 96ல் வெல்ல அதிமுக 61 இடங்களுடன் எதிர்க்கட்சியானது.

அசுர பலத்துடன் திமுக
2011-ல் அதிமுக 150 இடங்களில் வென்ற நிலையில் தேமுதிக 29 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. தற்போதைய தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வென்ற நிலையில் திமுக 89 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. தமிழக சட்டசபை வரலாற்றிலேயே மிக வலுவான எதிர்க்கட்சியாக திமுக தற்போது அமருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications