தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் குடும்பத்தினர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை சிறையில் உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த ஐந்து மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யவும், அவர்களை விடுதலை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியும் மீனவர்களின் குடும்பத்தினர், இன்று முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

ராமேசுவரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகியோர் போதைப் பொருள் கடத்தியதாக கடந்த 2011-ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Fishermen families meet CM O Panneerselvam to plead for their release

இதை தொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள மீனவர்கள் கொதிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சந்தித்த அ.தி.மு.க. எம்.பி. அன்வர்ராஜா மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்படியே அன்வர்ராஜாவின் தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், மீனவ சங்க பிரதிநிதிகள் இன்று சென்னையில் முதல்வரை சந்தித்தனர்.

அப்போது ஐந்து மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க மாநில அரசு வலியுறுத்தவேண்டும் என்றும், நிரபராதி மீனவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நாகை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைபடகுகள், நாட்டுபடகுகள், கட்டுமரங்கள் துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+