கன்னியாகுமரி தேங்காய்பட்டணத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டம்
கன்னியாகுமரி தேங்காய்பட்டணத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தினர்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இரண்டாவது நாளாக கன்னியாகுமரி மீனவர்கள் ஆர்பாட்டம்- வீடியோ
கன்னியாகுமரி: ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி தேங்காய்பட்டணத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போன மீனவர்களை மீட்டுதரக் கோரி குழித்துறை ரயில் நிலையத்தில் 12 மணிநேர மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இப்போராட்டம் நேற்று நள்ளிரவு கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று குளச்சல் பேருந்து நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பின்னர் இப்போராட்டமும் கைவிடப்பட்டது.
#standwithfisherman #saveourfisherman #thengapattinam #kaniyakumari https://t.co/GCbL1HEpOI
— kavin (@kkkavin) December 8, 2017
இதனிடையே தேங்காய்பட்டணத்தில் திடீரென ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். கருப்புக் கொடியுடன் மீனவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications