இலங்கை சிறையில் உள்ள 113 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அரசு உத்தரவு
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள 113 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் ராமேஸ்வரம், மண்டபம், துாத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 126 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 38 படகைகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தீபாவளி பண்டிகைக்காக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மத்திய அரசு மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்தியது.
இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 126 பேரில் 113 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய நீதிமன்றங்களுக்கு அந்நாட்டு சட்டத்துறை அமைச்சகம் நேற்று பரிந்துரை கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், 113 மீனவர்களையும் நாளை மன்னார், ஊர்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யப்பட உள்ளனர். அவர்கள் நவம்பர் 10 க்குள் தமிழகம் வருவார்கள் என, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் நவம்பர் 1 ந் தேதி கைது செய்யப்பட்ட துாத்துக்குடியைச் சேர்ந்த 7 பேர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 பேர் ஆகிய 13 பேரையும் விடுவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. இதனால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். எனினும் மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications