மீன் பிடிக்க 45 நாள் தடை... மீனுக்கு வந்த கிராக்கி.. செம விலையால் மக்கள் அவதி!
தூத்துக்குடி: தமிழகத்தில் மீன் பிடி தடைக் காலம் தொடங்கியுள்ளதால் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மீன் விலையும் கடுமையாக அதிகரித்து அசைவப் பிரியர்களை அவஸ்தைக்குள்ளாக்கியுள்ளது.
மீன்பிடி தடை காலம் எதிரொலியாக தமிழகத்தில் மீன்களின் விலை 4.5 சதவீதம் வரை உயர்ந்துளளது. இதனால அசைவ பிரியர்கள் தலையில் கைவை்த்து உட்கார்ந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் இந்த மீன்பிடி தடை அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் வரும் தடை
மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே மாதம் 29ம் தேதி வரை 45 நாட்களுக்கு தமிழகத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.

13 மாவட்டங்களில்
அதன்படி தற்போது மீன்பிடி தடை காலம் அமுலில் உள்ளது. இதனால தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் 20 ஆயிரம் விசைப்படகுள் மீன்பிடிக்க செல்லவிலலை.

விசைப் படகுகளுக்குத் தடை
பைபர் மற்றும் கட்டு மரங்களில் மட்டும் 20 கிலோ மீட்டர் வரை சென்று மீன்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செல்லும் படகுகளிலும் குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைத்து வருகிறது.

கேரளா, கோவாவிலிருந்து வரும் மீன்கள்
தடை மற்றும் உள்ளூரில் மீன்கள் கிடைக்காததால் கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, கோவா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில இருந்து தமிழகத்துக்கு மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வஞ்சரம் செம விலை
சும்மாவே வஞ்சரம் மீன் அதிக விலைக்கு விற்கப்படும். தடைக்கு முன்னர் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.540க்கு விற்கப்பட்டது. தற்போது அது ரூ.680க்கு விற்கப்படுகிறது.

வவ்வால் விலையைப் பாருங்க
வவ்வால் ரூ.,380லிருந்து ரூ.430க்கும், சங்கரா ரூ.130லிருந்து ரூ.170க்கும், பாறை ரூ.170லிருந்து ரூ.240க்கும், பிலி ரூ.90லிருந்து ரூ.130க்கும் விற்கப்படுகிறது.

ஹாய் கோழி.. ஹலோ ஆடு...!
இதே போல பல்வேறு வகை மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இநத உயர்வை தொடர்ந்து சிக்கன், மட்டன் பக்கம் மீன் பிரியர்கள் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

தடை முடியும் வரை
தடை முடியும் மீன்களின் விலை குறைய வாய்ப்பு இல்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெளி நகரங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுவதால் மீனகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அசைவ பிரியர்கள் தொண்டையில் முள் சிக்கிக் கொண்டதைப் போல அவஸ்தையில் உள்ளனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications