வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமாரைக்கண்ணன் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த
செந்தாமரைக்கண்ணனுக்கு பதவி ஏதும் ஒதுக்கப்படவில்லை.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.

தற்போது வடக்கு மண்டல ஐஜியாக இருந்த செந்தாமரைக்கண்ணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்
சாரங்கன் சென்னை (வடக்கு) கூடுதல் ஆணையராகியுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பியாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியாக இருந்த முத்தரசிக்கும் பணியிடம் ஒதுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications