காஞ்சிபுரத்தில் ஏரி நீரை காணச்சென்ற 5 பேர் அடித்துச்செல்லப்பட்ட சோகம் - 2 பேர் சடலம் மீட்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழையால் நிரம்பி வழிந்த ஏரிகளை வேடிக்கை பார்க்கச் சென்ற 5 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மூவரை பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஒரே நாளில் 34 செ.மீ மழை பெய்த காரணத்தால் காஞ்சிபுரம் மாவட்டம் குட்டித்தீவாக மாறியுள்ளது. காணும் இடங்களில் எல்லாம் தண்ணீர் மயமாகியுள்ளது.ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சில ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கன மழையால் ஏனாத்தூர் ஏரி நிரம்பி வழிந்தது. இதை பார்க்க ஆசைப்பட்ட கோனேரி குப்பத்தைச் சேர்ந்த குமரவேல் தனது மகன்கள் சரத், சதீஷ் ஆகியோருடன் நேற்று மாலை ஏனாத்தூர் ஏரிக்கு சென்றார். ஏரியின் மேல் நின்று பார்த்து கொண்டு இருக்கும் போது குமரவேல் கால் தவறி ஏரிக்குள் விழுந்தார். இதனால் பதற்றம் அடைந்த சரத், சதீஷ்சும் தந்தையை காப்பாற்ற ஏரிக்குள் குதித்தனர். அப்போது 3 பேரையும் வெள்ளம் அடித்து சென்றது.
குமரவேல் ஒரு மரத்தின் முனையை பிடித்து உயிர் பிழைத்து ஏரியின் கரைக்கு வந்து சேர்ந்தார். சரத், சதீஷ் ஆகியோரை பேரிடர் மீட்பு குழுவும், தீயணைப்புதுறையினரும் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் ஏனாத்தூர் ஏரியில் இருந்து சற்று தொலைவில் சரத் உடல் கண்டெடுக்கப்பட்டது. சரத்தின் தம்பி சதீஷ் நிலை என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து சதீசை பேரிடர் மீட்பு குழுவும், தீயணைப்பு துறையினரும் தேடி வருகிறார்கள். சரத் காஞ்சிபுரத்தில் கல்லூரியில் 2ம் ஆண்டும், சதீஷ் பிளஸ்2வும் படித்து வந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஏரி
ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் தண்ணீர் செல்வதை வேடிக்கை பார்க்கச் சென்ற மணிகண்டன், லோகநாதன் ஆகிய இரண்டு சிறுவர்கள் அடித்துச் செல்லப்பட்டார்கள். இவர்களின் உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. சிறுவர்கள் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
6000 பேர் மீட்பு
காஞ்சியில் செம்பரம்பாக்கம் ஏரி, நத்தப்பேட்டை ஏரி, செவிலிமேடு ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியதாலும், ஒரு சில ஏரிகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டதாலும் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.இதனால், மாமல்லன் நகர், பிள்ளையார்பாளையம், எம்எம் நகர், செவிலிமேடு, நாகாலத்துமேடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்புக் குழுவினர் உதவியுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிய பெண்கள்
இதே போல் வாலாஜாபாத் தெம்மேரி ஏரி நிரம்பியதால் இன்று காலை உபரி நீர் திறக்கப்பட்டது. அப்போது ஏரி நீர் திறப்பை வேடிக்கை பார்த்த ஐமஞ்சேரியைச் சேர்ந்த 3 பெண்கள் தவறி விழுந்தனர். அவர்களை வெள்ளம் அடித்துச் சென்றது. அவர்களில் 2 பெண்களை கிராம மக்கள் மீட்டனர். மேலும் ஒரு பெண்ணை மீட்க முடியவில்லை. அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு படையினர் இன்று மீட்டனர். அவரது பெயர் பிரேமா என்று தெரியவந்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications