வீட்டில் நீரை எப்படி எல்லாம் சேமிப்பது: இதை படிங்க முதல்ல
சென்னை: உலகில் கோடிக் கணக்கான மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி தவிக்கும் வேளையில் நீரை எவ்வாறு எல்லாம் சேமிப்பது என்பதை மக்கள் தெரிந்து கொள்வது நல்லது.
உலகில் கோடிக்கணக்கான மக்கள் பாதுகாப்பான குடிநீ்ர் இன்றி தவிக்கிறார்கள். இவ்வாறு பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நீரை சேமிக்கும் முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். அதை முதலில் வீட்டில் இருந்து துவங்க வேண்டும்.
டாய்லெட்டை ஃபிளஷ் செய்ய, குளிக்கத் தான் அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. தினமும் குளிக்க, முகம் கழுவ, பாத்திரம் கழுவ, வாய் கொப்பளிக்க மட்டும் 300 லிட்டரை நீரை நாம் பயன்படுத்துகிறோம். இந்நிலையில் நீரை சேமிக்கும் முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

குழாய்
பல் விளக்கும்போது குழாயை திறந்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டாம். கை கழுவும்போது, பல் விளக்கும்போது 5 நிமிடம் குழாயை திறந்து விட்டுக் கொண்டே இருப்பதால் 30 லிட்டர் நீர் வீணாகிறது.

ரிப்பேர்
பல வீடுகளில் குழாயை முழுவதுமாக திருக்க முடியாது. இதனால் தண்ணீர் சொட்டிக் கொண்டே இருக்கும். இதன் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க குழாயை ரிப்பேர் செய்ய வேண்டும்.

டிஷ் வாஷர்
கையால் 10 நிமிடம் பாத்திரங்களை கழுவினால் 57 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. டிஷ்வாஷரில் பாத்திரங்களை கழுவினால் 8 லிட்டர் நீரே தேவைப்படுகிறது. இருப்பினும் டிஷ்வாஷர் முழுவதுமாக நிறைந்த பிறகு அதை பயன்படுத்தவும். கையால் பாத்திரம் கழுவும் போது குழாயை திறந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டாம்.

வீடு
வீட்டில் உள்ள அறைகளை தண்ணீர் ஊற்றி கழுவிவிடாமல் துடைத்து எடுக்கலாம். இதன் மூலம் தண்ணீரை சேமிக்க முடியும். பாதி பக்கெட் நீரில் கிருமி நாசினியை ஊற்றி வீட்டை துடைக்கலாம்.

குளியல்
வீட்டில் ஷவரில் குளி்க்கையில் ஷாம்பூ மற்றும் சோப்பு போடுகையில் ஷவரில் நீரை ஓடவிட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். இதன் மூலமாகவும் நீரை சேமிக்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications