நெல்லையில் பயங்கரம்.. பள்ளிக்குச் சென்று வந்த 5 வயது குழந்தை வெட்டிக் கொலை
நெல்லை: நெல்லை பேட்டை பகுதியில் குடும்ப தகராறு காரணமாக 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி, பேட்டை, சுந்தரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் 38. இவரது மனைவி பிரேமா (32). இவர்களுக்கு கல்பனா (12), தருண்மாடசாமி (5) என்ற குழந்தைகள் உள்ளனர்.

பிரேமா, தமது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்துவைத்தார். ஆறுமுகத்தின் மனைவி கலா கர்ப்பிணியாக இருந்தார். அவர் ஆறுமுகத்தின் நடத்தையில் சந்தேகப்பட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். கலா பிரிந்துசென்றதற்கு, பிரேமாதான் காரணம் என ஆறுமுகம், பிரேமா குடும்பத்தினர் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில், பிரேமாவின் ஐந்து வயது மகன் தருண்மாடசாமி பள்ளி முடித்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது ஆறுமுகம் அந்த சிறுவனை சரமாரியாக வெட்டினான்.
படுகாயமடைந்த சிறுவன் தருண் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தருண் உயிரிழந்தார். இந்த பரிதாப சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி ஆறுமுகத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications