ஒபாமாவுடன் கட்டிப்பிடி வைத்தியம், சீன பிரதமருடன் செல்ஃபி: மோடியின் வேர்ல்ட் டூர் ஒரு பிளாஷ்பேக்
சென்னை: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரை என்ன தான் எதிர்கட்சிகளும், மக்களும் கிண்டல் செய்தாலும் அதை எல்லாம் காதில் வாங்காமல் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்.
அவர் செல்லும் இடம் எல்லாம் இந்தியர்களை சந்தித்து பேசி வருகிறார். மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் சில மறக்க முடியாத தருணங்கள்,

துபாய்
கடந்த ஆகஸ்ட் மாதம் அமீரகத்திற்கு சென்ற மோடி துபாய்க்கு சென்றபோது அங்கு நடந்த மர்ஹபா நமோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாரீஸ்
பாரீஸில் நடந்த பருவநிலை மாற்ற மாநாடு துவக்க விழாவில் கலந்து கொண்டபோது பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபை சந்தித்து பேசினார்.

ஒபாமா
நியூயார்க் நகருக்கு சென்ற இடத்தில் மோடியை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கட்டித் தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார்.

ரஷ்யா
மோடி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றபோது விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

செல்ஃபி
அண்மையில் சீனா சென்ற மோடி அந்நாட்டு பிரதமர் லீ கெகியாங்குடன் சேர்ந்து பெய்ஜிங்கில் உள்ள கோவிலுக்கு சென்ற இடத்தில் செல்ஃபி எடுத்தார். மோடி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மட்டும் அல்ல செல்ஃபி எடுப்பதற்கும் பெயர் போனவர்.

அபுதாபி
அபுதாபிக்கு மோடி சென்றபோது அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நஹ்யான் விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார். பட்டத்து இளவரசரே விமான நிலையத்திற்கு வந்து தன்னை வரவேற்றதை மோடி பெருமையாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications