வைகையில் வெள்ளம்: ஆற்றோர பகுதி மக்கள் வெளியேற மதுரை கலெக்டர் உத்தரவு
மதுரை: வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கரை ஓர பகுதியில் வாழும் மக்கள் வெளியேறும்படி மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் எங்கும் பரவலாக மழை நீடித்து வருவதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வைகையில் பொங்கி வரும் புதுப்புனலைக் கண்டு விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் கனமழையால் பல அணைகள் நிரம்பி வருகின்றன. மஞ்சளாறு, கொதையாறு, சோத்துபாறை அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

வைகை ஆற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்ட இருப்பதால் அங்கு சுற்றுவட்டார பகுதிகளில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நீர் வடிவதற்கு அனைத்து அடைப்புகளையும் சரி செய்து விட மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆணையிட்டுள்ளார்.
வியாழக்கிழமை நிலவரப்படி வைகை அணையில் 48.20 கனஅடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு 3,716 க்யூசெக்ஸ் நீர் வரத்து உள்ளதாகவும், அணையிலிருந்து சுமார் 1,660 க்யூசெக்ஸ் நீர் வெளியேற்றப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர் மழை காரணமாக வெள்ளம் அதிகரிக்க வாய்புள்ளது என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும், கரை ஓர மக்கள் வெள்யேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று ஆட்சியர் சுப்ரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications