காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.. தண்டோரா மூலம் அறிவிப்பு!
காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்: காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை மீண்டும் அடித்து ஆட தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த தென்மேற்கு பருவமழை மீண்டும் வெளுத்து வருகிறது.
கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி கேரளாவில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

நிரம்பி வழியும் அணைகள்
கர்நாடகாவில் கொட்டும் மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

அதிகளவு நீர்திறப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் மழையால் கர்நாடகாவின் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி வழிகின்றன. ஏற்கனவே பெய்த மழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு அதிகளவு நீர் திறக்கப்பட்டது.

திறக்கப்பட்ட மேட்டூர்
இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 124 அடியை எட்டியது. இதன்காரணமாக காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

1.25 லட்சம் கனஅடி
இந்நிலையில் தற்போது மீண்டும் அதிகளவு நீர் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை
இதன் காரணமாக காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தண்டோரா மூலம் எச்சரிக்கை
பி.என்.பட்டி கிராமத்தில் உபரி நீர்போக்கி பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் குளிக்கவோ துணிதுவைக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications