காவிரியில் பெருக்கெடுக்கும் வெள்ளம்.. வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை!
காவிரியில் இன்று அதிக அளவில் நீர் திறந்து விடப்பட வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: காவிரியில் இன்று அதிக அளவில் நீர் திறந்து விடப்பட வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக கர்நாடகாவில் கடுமையான மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளம் காரணமாக, தற்போது காவிரியிலும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 93000 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 35000 கன அடியாக இருந்தது. ஒரே இரவில் வெள்ளம் காரணமாக நீர் வரத்து மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 கன அடிஉயர்ந்தது.தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.40 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து இன்று வரக்கூடும்.
இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக நீர் வரத்து காரணமாக காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications