தி.நகர், கே.கே.நகரில் உயரும் வெள்ள நீர்மட்டம்: வெளியேறும் மக்கள்
சென்னை: சென்னை : சென்னை அடையாற்றில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் தி.நகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் தி.நகர், கே.கே.நகர், மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் ஜெனரேட்டர்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வர்த்தக பகுதியான தியாகராய நகரும் மழை வெள்ளத்தில் தப்பவில்லை.

குளமான பேருந்து நிலையம்
அடையாற்றில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் தி. நகருக்குள் நுழைந்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்தின் உள்ளே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
தி.நகர் மார்க்கெட், நடேசன் தெரு ஆகிய இடங்களில் தேங்கியுள்ள மழை நீரில் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.

கடைகளுக்குள் வெள்ளம்
முக்கிய வர்த்தகப் பகுதியான ரங்கநாதன் தெருவிலும் மழைநீர் தேங்கியுள்ளது. அங்குள்ள சில முக்கிய கடைகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் மோட்டார் பம்ப் களை வைத்து நீரை வெளியேற்றி வருகின்றனர்.

நட்சத்திர ஓட்டல்களில் வெள்ளம்
தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் வெள்ளம் புகுந்துள்ளது. ஜெனரேட்டர்களில் மழை நீர் புகுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறிவருகின்றனர்.

உயரும் நீர்மட்டம்
அடையாறு ஆற்றின் வெள்ளநீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் தி.நகர்வாசிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மகாலட்சுமி நகரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. படகுகள் மூலம் தங்களை மீட்க வேண்டும் என்று ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர்.

கே.கே.நகரில் வீடுகள் முழ்கின
அடையாறு ஆற்றின் வெள்ளம், கே.கே.நகரை மூழ்கடித்துள்ளது. ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. மீட்புக்குழுவினர் உடனடியாக வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இருப்போர் கடற்கரை சாலைக்கு வந்து, பூந்தமல்லி வழியாக சென்னையை விட்டு வெளியேறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications