மீண்டும் தலையெடுக்கும் கந்துவட்டி... பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை
கோவில்பட்டி:கோவில்பட்டியில் கந்து வட்டி கடன் தொல்லை காரணமாக பூ வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி புதுக்கிராமம் எம்.ஜீ.ஆர்.நகரைச் சேர்ந்த காசிபுலவர் மகன் முத்துகிருஷ்ணன். இவருடைய மனைவி ஜோதி, இவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.

வழக்கம்போல, இன்று காலை முத்துகிருஷ்ணன் வேலாயுதபுரத்தில் உள்ள தனது பூக்கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவரது மனைவி ஜோதி கடைக்கு சென்ற போது கடையின் உள்பகுதியில் முத்துகிருஷ்ணன் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஜோதி அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார், முத்துகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கடந்த 18ம் தேதி முத்துகிருஷ்ணன் தனக்கு கடன் கொடுத்தவர்கள் தன்னை தொடர்ந்து தொல்லை படுத்தி மிரட்டி வருவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த முத்துகிருஷ்ணன் கந்துவட்டி கடன் தொல்லையால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications