செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி.. சென்னை மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அட.. லீவும் இருக்கே!
சென்னை : சென்னை செம்மொழி பூங்காவில் ஜூன் 3 முதல் 3 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடத்தப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. அதன்படி கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் ஜூன் 3 மலர் கண்காட்சி நடத்த தோட்டக் கலைத்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி இரண்டாவது ஆண்டாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. செம்மொழி பூங்காவில் ஜூன் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
பெங்களூர், உதகை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம் எனவும் தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூபாய் 20 கட்டணமாகவும், பெரியவர்களுக்கு ரூபாய் 50 நுழைவு கட்டணமாகவும் வசூலிக்கப்படும், கேமராவுக்கு ரூ.50, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

செம்மொழி பூங்காவில், கடந்த ஆண்டு, ஜூன் மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, இரண்டாவது மலர் கண்காட்சி, வரும் ஜூன் 3 முதல் 5ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. செம்மொழி பூங்காவில், அரியவகை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வெயிலின் கடுமையான தாக்கம் காரணமாக பள்ளிகள் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கோடை விடுமுறை மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவதால் பள்ளி மாணவ- மாணவிகள் கண்காட்சிக்கு செல்ல நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications