திணறும் காய்கறி வியாபாரம்... வியாபாரிகள் கவலை
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் வரத்து அதிகமாக இருப்பதால் காய்கறிகள் விலை அதிகமாகவும், சில காய்கறிகள் விலை குறைவாகவும் விற்பனையாகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள அப்டா, வடசேரி கனகமூலம் சந்தைகளுக்கு பெங்களூர், ஒட்டன்சத்திரம், மதுரை மற்றும் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இவை மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு தரம் பிரித்து சில்லறை விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

குமரி மாவட்டத்தில் சில காய்கறிகள் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனை ஆகிறது. தற்போது கேரட் தரத்தை பொறுத்து ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. அனைத்து காய்கறிகளிலும் ரூ.2 முதல் ரூ.5 வரை விலை குறைந்துள்ளது. வரிகத்தரிக்காய் ரூ.22, நாட்டுகத்தரிக்காய் ரூ.35, முட்டைகோஸ் ரூ.15, பீட்ரூட் ரூ.20, கேரட் ரூ.15 முதல் 30 வரை விற்பனையாகிறது.
பீன்ஸ் ரூ.40, வெண்டைக்காய் ரூ.20, இஞ்சி ரூ.70, சீனி அவரை ரூ.24, கோழி அவரை ரூ.30, ஆப்பிள் தக்காளி ரூ.14, நாட்டு தக்காளி ரூ.8 முதல் 12 வரை விற்பனையாகிறது. வெள்ளரி ரூ.20, பூசணிக்காய் ரூ.15, புடலை ரூ.12, சவ்சவ் ரூ.40, காலி பிளவர் ரூ.25, சுரக்காய் ரூ.20, நீள மிளகு ரூ.20, உருண்டை மிளகு ரூ. 35, வழுதனை ரூ.20, கோவக்காய் ரூ.35, சேனை ரூ.35, முருங்கைக்காய் ரூ.40 ஆகிய விலையில் விற்பனையாகிறது.
இது குறித்து கனகமூலம் சந்தை மொத்த வியாபாரி ரமேஷ் கூறியதாவது: சபரிமலை சீசன் மற்றும் விரத நாட்களில் காய்கறி விலை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது காய்கறி வரத்து அதிகரிப்பால் விலை உயராமல் உள்ளது. குறிப்பாக, கோவக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், உருட்டு மிளகாய், விலை சற்று உயர்ந்துள்ளது. ஆனால் மற்ற காய்கறிகள் ரூ.2 முதல் ரூ.5 வரை விலை குறைந்துள்ளது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications