அந்த முடிவால் பொருளாதாரமே போச்சு.. எங்களிடம் ஆலோசித்திருக்க வேண்டும் : நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
புதுக்கோட்டை : 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததோடு ரூ.2,000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மே மாதம் 23 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிதித்துறை சார்ந்து முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது ரிசர்வ் வங்கி சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் முன்பு மத்திய அரசு மாநில அரசுகளிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும், 2016ல் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியபொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. அப்போதும் திமுக அந்த நடவடிக்கையை எதிர்த்திருக்கிறது.
எனவே, ஒரு முடிவு எடுக்கும்போதும், வருங்காலத்தில் இது போன்ற முடிவு எடுக்க நேர்ந்தாலும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களிடம் கலந்தாலோசிப்பது முறையாக இருக்கும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications