For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அம்மா விடுதலையாகணும்...': தேவா தலைமையில் கடவுள் வேடங்களில் கூட்டுப் பிரார்த்தனை!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: எல்லா வழக்குகளில் இருந்தும் ஜெயலலிதா மீண்டு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன் ஒரு வித்தியாசமான கூட்டுப் பிரார்த்தனை இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் பி.சோமசுந்தரம் விடுத்துள்ள அறிக்கை:

"மக்கள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் எல்லா வழக்குகளில் இருந்தும் மீண் வர வேண்டும் என்பதற்காக எங்கள் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய உள்ளோம்.

Folk artists joint prayer for Jayalalithaa's release

சிவன், பார்வதி, முருகன், விநாயகர், காளி உட்பட பல வேடங்களில் கூட்டுப் பிரார்தனை நடைபெற உள்ளது. அத்துடன் கிராமிய கலைஞர்கலான , கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் சம்மந்தப் பட்ட கலைஞர்கள் அந்த உடையலங்காரத்துடன் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.

இந்தப் பிரார்த்தனையில் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத் தலைவர் தேவா தலைமையில் செயலாளர் சித்ரா விஸ்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டு பிரார்த்தனை 07.10 . 2014 செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 10 மணி முதல் 1 மணி வரை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நடைபெற உள்ளது. இதில் கலைமாமணி விருது பெற்ற பல கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள்," என்று தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu Folk artists today arranged for a joint prayer for Jayalalithaa's release from all her cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X