ஒயிலாட்டம், கரகாட்டம் தப்பாட்டம் தமுஎசவின் கலை நிகழ்ச்சிகள்
திண்டுக்கல்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கலை இலக்கிய மாலையில் கரகாட்டம், ஒயிலாட்டம், பாரம்பரிய கலையான கோட்டைப்பட்டி தேவராட்டம், நையாண்டி தர்பார் உள்ளிட்ட நாட்டுபுற நடன கலை நிகழ்ச்சிகள் களை கட்டியது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் சார்பாக கலை இலக்கிய மாலை 20.12.2014 அன்று மாலை 5.00 மணியளவில் வத்தலக்குண்டு வானொலித்திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் தண்டபாணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, பழைய வத்தலக்குண்டு ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.தனபாலன், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், வைகை அனிஷ்,வசந்தமுகில், வதிலை வெங்கடேசு, வைகை முத்து, நிலவை முருகேசன், எல்.ஐ.சி.லட்சுமணன், பாடகர் கண்ணன், அஞ்சல்துறை அலெக்சாண்டர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கருத்தரங்கம், கிராமிய கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பாரம்பரிய கலையான கோட்டைப்பட்டி தேவராட்டம், நையாண்டி தர்பார், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவுசார்ந்த நூல்கள் வழங்கப்பட்டது. செயலாளர் கவிஞர் கவிவாணன் நன்றி கூறினார்.













Click it and Unblock the Notifications