கன்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடல் பாடிய கோவன் கைது
சென்னை: ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவன் கைது செய்யப்பட்டார்.
ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார் கைது செய்யப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்னால் கோவன் தலைமையில் போராட்டக்காரர்கள் திரண்டனர்.
கன்யா குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் ஏபிவிபி அமைப்பை நீக்க வேண்டும் என்று கோரியும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
அப்போது மத்திய அரசைக் கண்டித்து, "நெருங்குதடா! இருள் நெருங்குதடா! காவி இருள் நெருங்குதடா!" என்ற பாடலை பாடிய கோவன், கருத்துரிமைக்கெதிராக மாணவர் கன்யா குமார் கைது செய்யப்பட்டிருப்பதாக பேசினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவன் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கெனவே மதுவிலக்கை வலியுறுத்தி 'மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடலைப் பாடியதற்காக கோவன் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக பாடலை பாடி கைதாகியுள்ளார் கோவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications