Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விதம் விதமான சாப்பாடு.. பிரமிக்க வைத்த காரைக்குடி உணவுத் திருவிழா!

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா இன்று ( 31.08.2016) பிரமிக்கத்தக்க வகையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று துறைத்தலைவர் பேராசிரியர்.முனைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா அனைவரையும் வரவேற்றார்.

Food festival held in Karaikudi school

கவிதா நர்சிங் ஹோம் உரிமையாளர் டாக்டர் ரமேஷ் உணவுத் திருவிழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். காரைக்குடி இராமநாதன் பிக்சர்ஸ் வி.ஆர். இராமநாதன், காரைக்குடி சபரி டிராவல்ஸ், உரிமையாளர் கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சகாய அமலன், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழுத் தலைவர் பேராசிரியர் முனைவர். நாகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Food festival held in Karaikudi school

பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் அழகு சுந்தரி கிராம கல்வி குழுத் தலைவர் ஆறுமுகம் மற்றும் டேசொட்டா பேக்கரி உரிமையாளர் காளீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

Food festival held in Karaikudi school

மாணவர்கள் இவ்வுணவுத் திருவிழாவில் கேழ்வரகு, திணை,கோதுமை, சோளம், சாமை, கம்பு போன்ற தானிய வகைகளில் கூழ், தோசை, பூரி, லட்டு, புட்டு, இட்லி, பக்கோடா, சேமியா, சாதம், பஞ்சரத்தின தோசை ஆகிய உணவு வகைகளையும், வாழைப்பூ, காரட், பீட்ரூட் காய்கறிகளில் செய்த வடை, பால்கோவா, உருளையில் க்லோப்ஜாமுன் போன்றவைகளையும், மருத்துவக் குணங்கள் நிறைந்த தூதுவளை, முள்ளுமுருங்கை, கற்பூரவள்ளி, கற்றாழை, முடக்கத்தான் போன்றவற்றிலிருந்து லேகியம், தோசை, ஜுஸ் ஆகியவற்றையும், வாழைப்பழம், மாதுளம் பழம், திராட்சை போன்ற பழங்களை கொண்டு சாலட், ஜூஸ், அல்வா உணவு வகைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இவ் விழாவில் பங்கேற்றனர். ஆறாம் வகுப்பில் என். சக்திவேல், ஏழாம் வகுப்பில் ஏ. பாஸ்டின், எட்டாம் வகுப்பில் பி. சுஜித்ரா, ஒன்பதாம் வகுப்பில் ஷாஜி முகமது முதலிடம் பெற்றனர். தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Food festival held in Karaikudi school

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கட்டிட ஒப்பந்தக்காரர் செந்தில்குமார், டிசோட்டா பேக்கரி உரிமையாளர் காளீஸ்வரன், தன்னம்பிக்கை பயிற்சியாளர் வினைத்தீர்த்தான் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Food festival held in Karaikudi school

உணவுத் திருவிழாவின் நடுவர்களாக கோட்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கே. எஸ். சோபனா, அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கே. சுசீலா ராணி, காரைக்குடி எஸ். எம். எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் புவனேஸ்வரி செயல்பட்டனர். பட்டதாரி ஆசிரியர் எஸ். விஜயலெட்சுமி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி கோமதி மற்றும் பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+