திருப்பூர்: சைனிக் ராணுவப் பள்ளி மாணவர் பலி... 26 பேருக்கு உடல் நலக் குறைவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராணுவப் பள்ளியில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகரில் சைனிக் ராணுவப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் சித்தார்த் நேற்று காலை வாந்தி, மயக்கத்துடன் திடீரென உயிரிழந்தார். மேலும் 26 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications